தினை பயன்கள் & தினை உப்புமா செய்முறை

 


தினை ஊட்டச்சத்து மதிப்பு:

இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம், புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்தது. செரிமானத்தை மேம்படுத்துதல், நீரிழிவு நோயை நிர்வகித்தல் மற்றும் எடை நிர்வாகத்தை ஆதரித்தல். குறைந்த கிளைசெமிக் குறியீடு: இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவுகிறது.

இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.

நரம்பு மண்டலத்தை ஆதரிக்கிறது

செரிமானத்திற்கு உதவுகிறது

நீரிழிவு நோயை நிர்வகிக்க உதவும்.

 சமையல் பயன்கள்:

எங்கள் தினை ப்ரீமிக்ஸ்யை உப்புமா, பொங்கல் செய்யது சாப்பிடலாம் தனித்தனி பேக்கேட்டுகளில் உங்கள் தேவைக்கு ஏற்ப துரித உணவு போல் தாயார் நிலையில் உள்ளது.

                    *******************************************************

 

தினை அரிசி வெஜிடபிள் உப்புமா

சிறுதானியங்களில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று தினை அரிசி, காய்கறிகள் சேர்த்து உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் : தினை அரிசி - ஒரு கப் (250gm), வெங்காயம், கேரட் - தலா ஒன்று, பச்சைப் பட்டாணி - அரை கப்,

(காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், உப்பு, கறிவேப்பிலை இவை அனைத்தும் எங்கள் தினை ப்ரீமிக்ஸ் பேகேட்டில் உள்ளது)

செய்முறை : 

வெங்காயம், கேரட், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு பின்னர் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் பச்சைப் பட்டாணி, பொடியாக நறுக்கிய கேரட் சேர்த்து வதக்கவும். இதில், ஒரு கப் திணை அரிசிக்கு 3 கப் என்ற விகிதத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். கொதித்ததும் சுலோச்சி ஐயங்கார்ஸ் பொடியின் தினை ப்ரீமிக்ஸ்யை போட்டு கிளறி மூடி, அடுப்பை 'சிம்மில் வைக்கவும். 10 நிமிடம் வேக வைக்கவும். மீண்டும் கிளறிவிட்டு தண்ணீர் வற்றி நன்றாக வெந்ததும், கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

சூப்பரான தினை வெஜிடபிள் உப்புமா ரெடி.

இதில் ஏதேனும் உங்களுக்கு சந்தேகங்கள் இருந்தால் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை iyengarspodi@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள். அல்லது WhatsApp 7358592679 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

ஆரோக்கியமான உணவு உண்டு நல்வாழ்க்கையை வாழ வாழ்த்துக்கள்💐

#easycooking #healthyfoodrecipe #healthyfood #healthylifestyle #healthblog





Comments