துளசியில் வைட்டமின் மற்றும் ஜின்க் சத்து உள்ளது. மேலும் இவற்றில் ஆன்டி பாக்ட்ரியல், ஆன்டி வைரஸ், பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் இருக்கிறது. இதனால் நம் உடலில் தொற்றுகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது. தினமும் துளசி இலையை மென்று சாறை விழுங்கி வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பல பிரச்சனைகள் வாழ்நாள் முழுக்க வரவே வராது. வாய் துர்நாற்றமும் இருக்காது. உடலில் வியர்வை நாற்றம் பற்றி கவலைப்படுபவர்கள், குளிக்கின்ற பொழுது தண்ணிரில் முந்தைய நாளே துளசி இலைகளை ஊறவைத்து அந்த தண்ணீரில் குளித்து கொண்டு வந்தால் வியர்வை துர்நாற்றம் போய் உடல் மணக்கும்.
மேலும் செரிமான பிரச்சனை, வாய்வு பிரச்சனைக்கு சிறந்த தீர்வை அளிக்கிறது.
துளசி ஏராளமான நோய்களுக்கு மருந்தாவதால் துளசிய ‘மூலிகைகளின் அரசி’ என்று சொல்வார்கள். இது நம்மை, நோய் வருமுன் காத்து, எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும் அற்புத ஆற்றல் வாய்ந்தது.
செந்துளசி, வெண்துளசி, கருந்துளசி, நாய்த்துளசி, , நற்றுளசி, சீனீதுளசி… என துளசியில் பல வகை உண்டு.
சுத்தமான செம்பு பாத்திரத்தில் கொஞ்சம் நல்ல தண்ணீரை எடுத்து, அதில் ஒரு கைப்பிடி துளசியைப் போட்டு 8 மணி நேரம் மூடிவைத்து பிறகு அந்த நீரைக் குடித்து வரவேண்டும். இதை வெறும் வயிற்றில் 48 நாட்கள் குடித்து வந்தால் எந்த நோயும் அண்டாது. அத்துடன் தோல் சுருக்கம் நீங்கி, நரம்புகள் பலப்படும். பார்வை குறைபாடு நீங்கும். எப்பவும் இளமையுடன் இருக்க உதவும்.
1. இதய ஆரோக்கியம் மேம்படும்:
துளசியில் உள்ள ஆக்சிஜினேற்ற பண்புகள் இரத்த கொழுப்பின் அளவை சமமாக வைத்து கொள்ள உதவுகிறது. இதனால் இதய ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
2. இரத்த அழுத்தம் சரிசெய்கிறது:
துளசியில் ஓசிமுமோசைடுகள் ஏ மற்றும் பி என்ற சேர்மங்கள் உள்ளது. இந்த கலவையானது மன அழுத்தத்தை குறைத்து மூளை பகுதியில் உள்ள செரோடோனின் மற்றும் டோபமைனை சமநிலைப்படுத்துகிறது. இவற்றில் உள்ள அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் இரத்த அழுத்தத்தையும் குறைக்க செய்கிறது.
3. காய்ச்சல் பிரச்சனை தீர்ந்துவிடும்:
துளசியில் ஆன்டி பாக்ட்ரியல் மற்றும் ஆன்டி வைரஸ் பண்புகள் உள்ளது. இவை உடலில் ஏற்படும் தொற்றுக்களை எதிர்த்து போராட உதவுகிறது. இதற்கு துளசியின் சாற்றுடன், கருப்பு மிளகை நுனுக்கி சேர்த்து கொள்ளவும். இதனை காய்ச்சல் பிரச்சனைக்கு எடுத்து கொண்டால் உடலின் வெப்பநிலையை குறைக்க செய்யும்.
4. நீரிழிவு நோய் குறைக்க உதவும்:
துளசி இலைகளின் சாற்றை குடித்து வருவதால் நீரிழிவு 2 நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவை குறைக்க செய்கிறது.
5.புற்றுநோய் பிரச்சனை வராமல் தடுக்க உதவும்:
துளசியில் உள்ள பைட்டோ கெமிக்கல் ஆக்சிஜினேற்ற பண்புகளை கொண்டுள்ளது. இவை தோல், கல்லீரல், நுரையீரல், வாய் புற்றுநோய் போன்றவை வராமல் பாத்துக்க உதவுகிறது.
6. சிறுநீரக கற்கள் வராமல் தடுக்க உதவும்:
துளசி உடலில் உள்ள நச்சு கிருமிகளை வெளியேற்றுகிறது. உடலில் உள்ள யூரிக் அமிலத்தின் அளவை குறைக்கிறது. துளசி இலையை சாப்பிடுவதன் மூலம் சிறுநீரக கற்கள் உருவாகமால் பாதுகாக்கிறது.
7. சளி மற்றும் இருமலை சரிசெய்கிறது:
துளசியில் உள்ள கேம்பின், சினியோஸ் போன்ற சத்துக்கள் நெஞ்சில் உள்ள சளியை குறைக்க செய்கிறது. இதற்கு துளசி சாற்றுடன், தேன், மற்றும் இஞ்சி சிறிதளவு சேர்த்து கலந்து கொள்ளவும். இதனை சாப்பிடுவதன் மூலம் காய்ச்சல், சளி, இருமல் போன்றவற்றை குறைக்க உதவுகிறது.
Comments
Post a Comment