வயிற்று புண் வைத்தியங்கள்



 


வயிற்று புண்ணை குணமாக்கும் பாட்டி வைத்தியங்கள் 

1. இளநீரை உணவு உண்டு 1 மணி நேரம் கழித்து குடித்து வந்தாலும் அல்லது காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தாலும் வயிற்று புண், வாய் புண் போன்றவை குணமாகும். அதில் தொடர்ந்து 60 நாட்கள் இளநீர் அருந்துவதால் உடல் எடைக் குறைவதைக் கண்டறிந்துள்ளனர். 
இது உடலுக்கு உடனடி ஆற்றல் தரும் இயற்கை குளுக்கோஸ் ஆகும். 


2. தேங்காய் பாலை குடித்து வந்தால் வயிற்று புண் குணமாகும். தேங்காய் பாலை வெறும் வயிற்றில் குடித்து வர வாய் மற்றும் வயிற்றுப் புண்களை குணப்படுத்தலாம். இதில் உள்ள ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி அல்சர் பண்புகள் புண்களை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை எதிர்த்து போராட உதவுகின்றன. தேங்காய் பாலில் உள்ள ஆன்டி செப்டிக் பண்புகள் உடலில் ஏற்படும் நோய் தொற்றுகளை எதிர்த்து போராட உதவுகின்றன. பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்கிருமிகளின் தொற்றுகளிலிருந்து உடலை பாதுகாத்துக் கொள்ளவும், நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும் தேங்காய் பாலை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதன் மூலம் வயிற்றுப்போக்கு போன்ற செரிமான பிரச்சனைகளையும் தடுக்கலாம்.

3.அகத்திக் கீரையை தினமும் உணவில் – சேர்த்துக்கொண்டால் வயிற்று புண் குணமாகக்கூடும். காய்ச்சலைக் குறைத்து உடல்சூட்டை சமன் படுத்தும் இயல்புடைய அகத்திக் கீரையை குடல்புண், தொண்டைப்புண் மற்றும் தொண்டை வலி உள்ளவர்கள் கீரையை பச்சையாக மென்று சாற்றை விழுங்கினால் வந்த நோய்கள் குணமாகும். மற்றும் அகத்தி கீரையை அரைத்து ஆறாத நாள்பட்ட புண்கள் மீது தடவினால் அவை விரைவில் ஆறிவிடும்.

4. நெல்லிக்காய் சாறு தினமும் 30 மில்லி அளவுக்கு சாப்பிட்டால் வயிற்று புண் ஆறும்.
நெல்லிக்காய் செரிமான மேம்பாட்டுக்கும், அசிடிட்டி பிரச்சனைக்கும் உதவுகிறது.வெறும் வயிற்றில் நெல்லிக்காயினை சாப்பிட்டு வர மலச்சிக்கலும், அசிடிட்டியும் குறையும். இது அல்சர் போன்ற பிரச்சனைக்கும் நல்லது. இது உங்களுடைய ஒட்டுமொத்த செரிமான மண்டலத்தையும் சீராக இயங்க வைக்கும்.

நெல்லிக்காயில் செரிமான மண்டலத்துக்கு ஆதரவளிக்கும் பண்புள்ளது. இதனில் உள்ள நார்ச்சத்து, குடல் அசைவுகளை ஒழுங்குப்படுத்த உதவுகிறது. கூடுதலாக, நெல்லிக்காய் இரைப்பை மற்றும் செரிமான மண்டல சுரப்பிக்கும் உதவுகிறது. இதனை உண்பதால், நாம் சாப்பிடும் உணவு செரிமானமடைகிறது. மேலும் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்சவும் இது உதவுகிறது.



இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறேன். இந்த பதிவு மற்றவருக்கும் பயன்பெற இதனை உங்கள் அன்பானவர்களுக்கு பகிருங்கள்.

Comments